Hindu-Tempel

Click here to edit subtitle

கடவுள் சிலைக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம்

பூக்கள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்க கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்கு படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தை கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்பணிக்க முடியும். உதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவைகள். பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாக சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.

கோவிலின் கட்டமைப்பு மற்றும் இருப்பிடத்திற்கு பின்னணியில் உள்ள காரணம்

எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.

கடவுளின் சிலை

கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிரகத்தில் தான் கடவுளின் சிலை வைக்கப்படும். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிலையை வைத்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.

தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?

தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் மூலவர் அறைக்குள் அர்ச்சகர் மட்டுமே நுழைய முடியும். மக்கள் அங்கு செல்ல முடியாது. ஆனால் பிரகாரத்தில் உள்ள பிற தெய்வங்களின் சிலைகளை தொட்டு வணங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோல் தெய்வச் சிலைகளை தொட்டு வணங்குவது சரியா?

கோயில் என்பதை மரியாதைக்குரிய இடமாக கருதுகிறோம். பொதுவாக மரியாதைக்கு உரிய மனிதர்களையே நாம் தொட்டுப் பேசுவது கிடையாது. ஒரு சில அடி தூரம் தள்ளி நின்று பவ்யமாகவே பேசுவோம்.

மரியாதைக்குரிய மனிதர்களுக்கு இவ்வளவு மதிப்பளிக்கும் நாம், இறைவனைத் தொட்டு வணங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, தெய்வச் சிலைகளை தொடாமல் வணங்குவதே சிறந்தது.

இதற்காக சிலைகளைத் தொட்டால் பாவம், தீட்டு என்பது போல் காரணம் கற்பித்துக் கொள்ளக் கூடாது. மரியாதை நிமித்தமாகவே சிலைகளை தொடாமல் வணங்க வேண்டும். இறைவன் மேன்மை பொருந்தியவர் என்பதையும், அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும், தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது.

2015 திருவிழா புகைப்பட தொகுப்புகள் (மேலும்)
2015 திருவிழா புகைப்பட தொகுப்புகள் (மேலும்)

ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம், சுவிட்சர்லாந்து

வரலக்சுமி பூஜை 28.08.2015

28.07.2015 அன்று வரலக்சுமி பூஜை முன்னிட்டு மாலை 04.30 மணிக்கு விஷேட பூஜைகள் மற்றும் விளக்கு பூஜையும் நடைபெறும் இப் பூஜையில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் விரைவில் திருமாங்கல்ய பாக்கியம் பெறவும் திருமணமான பெண்கள் கணவனுடைய ஆயுள் விருத்திக்காவும் மற்றும் லக்சுமி கடாட்சம் பெறவும் பூஜைகளில் கலந்து கொண்டு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் அருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்
விளக்குப்பூஜை கலைந்து கொள்ள விரும்பும் அடியார்கள் முன்பதிவு செய்துகொள்ளவு

இங்கனம்
ஆலய நிர்வாக சபையினர்

கும்பாபிஷேக புகைப்பட தொகுப்பு (மேலும்)

ஓல்ரன் ஸ்ரீ மனோன்மணிஅம்பாள் ஆலயத்திருப்பணி

சிறப்புடன் நிறைவேற நல்லாசிகள்

ஆகமஆலோசகர் சிவாகமவித்வான்

அவுஸ்திரேலியத்திருமணப்பதிவாளர்

டாக்டர் சிவஸ்ரீ. நா.சோமாஸ்கந்தக்குருக்கள்

அவுஸ்திரேலிய இந்துக்குருமார் கவுன்சில்

சர்வதேச இந்துக் குருபீடம் அவுஸ்திரேலியப் பிரதிநிதி (மேலும்)

கட்டுமானப்பணி
ஸ்ரீ மனோன்மணி அம்பாள் அருள் பாலிக்க,சுவிஸ்நாட்டின் ஓல்ரன் மாநகரில் ஏறத்தாள 17 வருடகாலமாக ஸ்ரீமனோன்மணி அம்பாள் அடியவர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள்.(மேலும்)
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் (மேலும்)
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் (மேலும்)
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் (மேலும்)
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் (மேலும்)
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் (மேலும்)
Öffnungszeiten und Gottesdienst
Montag  bis  Sonntag

           காலை  07.00  -  09.00 மு.ப

மதியம்  11.00  -  13.00 ந.ப

           மாலை  18.00  - 20.00  பி.ப
 
             2016 பூஐை விரதம்

 

  05.03.2016 ஏகாதசி விரதம்

 

  06.03.2016 பிரதோச விரதம்

 

  07.03.2016 மஹா சிவராத்திரி விரதம்

 

  08.03.2016 அமாவாசை        விரதம்

 

  12.03.2016 சதுர்த்தி விரதம்

 

  14.03.2016 ஷஷ்டி விரதம்/

பங்குனி திங்கள்

 

  19.03.2016 ஏகாதசி விரதம்

 

  20.03.2016 பிரதோச விரதம்

 

  21.03.2016 2ம் பங்குனி திங்கள்

 

  23.03.2016 பங்குனி உத்திரம்

  27.03.2016 சதுர்த்தி விரதம்

 

  28.03.2016 3ம் பங்குனி திங்கள்

 
 03.04.2016 பிரதோச விரதம்
 
  04.04.2016 4ம் பங்குனி திங்கள்
 
  05.04.2016 பிரதோச விரதம்
 
  07.04.2016 அமாவாசை விரதம்
 
  10.04.2016 சக்திகணபதி சதுர்த்தி விரதம் / கார்த்திகை விரதம்
 
  11.04.2016 5ம் பங்குனி திங்கள்
 
  12.04.2016 ஷஷ்டி விரதம்
 
  14.04.2016 துர்முகி வருடப்பிறப்பு
 
  17.04.2016 ஏகாதசி விரதம்
 
  19.04.2016 பிரதோச விரதம்
 
  25.04.2016 சதுர்த்தி விரதம்
 
  30.04.2016 நடேசரபிசேகம்