Hindu Tempel

நல்வரவு Willkommen PDF Print மின்னஞ்சல்

சிவமயம்

cf022aca

 

drso-hafe

ஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி

அம்பாள்ஆலயத்திருப்பணி

சிறப்புடன் நிறைவேற

நல்லாசிகள்

ஆகமஆலோசகர் சிவாகமவித்வான்

அவுஸ்திரேலியத்திருமணப்பதிவாளர்

டாக்டர் சிவஸ்ரீ. நா.சோமாஸ்கந்தக்குருக்கள்

அவுஸ்திரேலிய இந்துக்குருமார் கவுன்சில்

சர்வதேச இந்துக் குருபீடம்

அவுஸ்திரேலியப் பிரதிநிதி

சுவிர்சலாந்தின்  ஓல்ரன்  அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்மாள் மிகவும் தெய்வீக  சக்தி நிறைந்த  தெய்வமாகும். அந்த ஆலயத்தில்  கடந்த பலவருடங்களாக கொடியேற்று விழாவுடன் வருடாவருடம் மிகவும் சிறப்பாக மகோற்சவப்பெருவிழா நடைபெறுவதை அனைவரும்  அறிவர்.தேர்த்திருவிழாவன்று பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள்  ஒன்றுகூடி அன்னையின் விழாவை  தரிசித்து  மகிழ்வர். அம்மன்  திருவருளால்  புதிய  ஆலயம்  கட்டுவதற்கென  சொந்தமாக  காணி  வாங்கி  அடிக்கல்  நாட்டுவைபவத்துடன்  புதிய ஆலயதிருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது  அன்னையின் அருளுக்கு  அரியதொரு எடுத்துக்காட்டு  எனலாம்.தெய்வத்  திருக்கோவில் சிறப்புற நிகழ்ந் தேறி மஹாகும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக  ஆலயத்தினர் அயராது  பாடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் ஆலயத் திருப்பணி நிதிக்காக தமது  பங்களிப்பைச்  செய்வது அன்னையின்  பக்தர்களுக்கு  தலையாய  கடமையாகும். தமிழகத்திலிருந்து தருவிக்கப்படவிருக்கும் சிற்பிகள்  வந்திறங்கியதும் அம்மாளின்  அருளால்  அழகிய புதிய  திருக்கோவில்  கண்கவர் சிற்பவேலைப்பாடுகளுடன் கவினுறு சித்திரப்பதுமைகள் தெய்வீகத் திருவுருவச் சிலைகள் அமைந்த சுந்தர விமானங்களுடன் ஒவ்வொரு மூர்த்திகளுக்கும்  தனித்தனியாகக் கருவறைகள் நிர்மாணிக்கப்பட்டு  அனைத்துப் பரிவாரங்களுடனும் அண்டசராசரங்களுக்கும்  தாயாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி  அம்பாள் மூலாலயத்தில் சுவாண நவரத்தினமயமான சிம்மாசனத்தில் வீற்றிருந்து அனைவருக்கும்  நல்லருள் பாலிக்கும் கண்கொள்ளாக் காட்சியை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டு களிக்க ஆயத்தமாகுவதுடன், தேவியின் ஆலயத் திருப்பணிக்காக  உங்கள்  பங்களிப்பை உடனடியாக  வாரி வழங்கி  அன்னையின் அருளால் அனைவரும் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ்வதுடன் தாயகத்து உறவுகளின் அல்லல்  தீர்த்து சாந்தியும்  சமாதானமும்  நிலவ  அன்னையைப்  பிரார்த்தித்து  அருள்பெறுவோமாக.

 

திருப்பணி செய்வாக்கு செம்பொன் விருப்புடன் ஈவார் பெறுக வீடு

 

ஸ்ரீமனோன்மணி  அம்பாள்  ஆலயம்

Olten   (Switzerland)

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

எல்லாம் வல்ல ஸ்ரீ மனோன்மணி அம்பாள் அருள் பாலிக்க,சுவிஸ்நாட்டின் ஓல்ரன் மாநகரில் ஏறத்தாள 17 வருடகாலமாக ஸ்ரீமனோன்மணி அம்பாள் அடியவர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள். அம்பாளிற்கு நிரந்தரமாக ஆலயம் ஒன்றை அமைக்கும் நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு இடத்தை வாங்கி அதில் அடிக்கல்லும் நாட்டப்பட்டதும் நீங்கள் அறிந்த விடயமே. புலம்பெயர் மண்ணாம் சுவிஸ்நாடு, அகதிகளாக வந்த சமூகத்தின் மதவழிபாட்டிற்கு மதிப்பளித்து ஆலயம் அமைப்பதற்கான அனுமதியையும் அரசு வழங்கியுள்ளது மிகவும் சந்தோஷமான விடயம். அதன்அடிப்படையில் ஆகம விதிப்படி ஒரு புதிய ஆலயத்தை அடியார்களாகிய உங்களின் பங்களிப்பின் மூலம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான ஆரம்ப வேலையை 22.08.2008 அன்று தொடக்கி வைத்து தொடர்ந்து ஆலயம் அமைக்கும்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் நேரடியாகவும் சென்று பார்வையடலாம், அல்லது அதற்கென ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இணையத்தளத்தினூடாகவும் அறிந்துகொள்ளலாம். ஆலயத்தின் இணையத்தள முகவரி. www.hindu-tempel.ch அடியார்களின் சூழ்நிலை கருதி ஆலயத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அதனை உங்கள் பெயர்களால் உபயமாக செய்துதரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அவையாவன ஒவ்வொரு சதுரமீற்றருக்கான நிதி, மூலஸ்தானம், ராஜகோபுரம், என பல பிரிவுகளாகப் பிரித்து மேலும் மூலஸ்தானம், ராஜகோபுரத்தை பல படிகளாக பிரித்து தாங்கள் பங்களிக்க ஏதுவாக வகுத்துள்ளோம். ஒரு ஆலயத்தை ஒரு தனிநபராலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராலோ கட்டிவிட முடியாது. ஒரு முழுமையான ஆலயம் உருவாகவேண்டுமெனில் எல்லாமக்களும் பங்கு கொள்ளவேண்டும். இவ்வாலயத்தைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டிமுடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் உங்கள் எல்லோருடைய இல்லங்கள் தோறும் சென்று நிதி திரட்டுவதென்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே நமக்கு வழங்கிய அங்கீகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி ஒரு முழுமையான ஆலயத்தைக் கட்டுவதற்கு நீங்கள் எல்லோரும் முன்வர வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு கருத்து வேறுபாடுகளும் காட்டாமல் புலம்பெயர் மண்ணில் வாழ்கின்ற நம் எதிர்காலச் சந்ததியினரின் இந்துமதக் கோட்பாட்டை ஊக்குவிக்கும் இச் செயற்பாட்டிற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றோம். எல்லாம் வல்ல ஸ்ரீமனோன்மணி அம்பாள் தங்களுக்கு நல்லாசிகளும் நல்லருளும்  வழங்க வேண்டும், அத்தோடு எம் தாயக மக்களின் துன்பநிலைமாறி,இன்பநிலைதோன்ற எல்லா வல்ல அன்னையை பிரார்த்திப்போமாக.

நன்றி, வணக்கம்

இங்ஙனம்

ஆலய நிர்வாகம்

 


 


 


 

 

ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் ஓல்ரன்

 

 

 

img_2690

 

ஸ்ரீமனோன்மணி அம்பாள்  ஆலய கட்டடபொறியிலாளர்கள்.

 

 

 

 

அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் ஓல்ரன் சுவிஸ்

அம்பாள் அடியார்களே

அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம் சுவிஸில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமென்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் 1991 ம் ஆண்டு எழுந்தருளிய ஸ்ரீமனோன்மணி அம்பாள் 1993 ம் ஆண்டு Bleichestrasse 6 4632 Trimbach என்ற இடத்தில் குடிகொண்டு வேண்டுவோர் அனைவருக்கும் வேண்டும் வரம் தந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள் அம்பாளின் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்பட்டதால் 2000 ஆண்டு எங்களுக்கு ஒரு புதிய இடத்தைதேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்படி அதற்குரிய திட்டங்களை தாயரித்து 2005 ம் ஆண்டு முதற்கட்டமாக Mieserenweg 13   4632  Trimbach  என்ற இடத்தில் காணி மற்றும் அரசாங்கஅனுமதிபெறப்பட்டு 2006 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே. கடந்த 22.08.2008 வெள்ளிக்கிழமை அன்று கட்டடவேலைகள் ஆரம்பமாகி நடைபெற்ருக்கொண்டடிருக்கிறது. இதை நீங்கள் அனைவரும் www.hindu-tempel.ch என்ற எங்கள் இணையத்தளத்தில் பார்க்கலாம் பதிய ஆலயம் நிர்மாணிக்கப்படும் இடத்தில் எவ்வாறான திருப்பணிவேலைகள் நடைபெறுகிறதென்பதை உடனுக்குடன் இந்தஇணையத்தளத்தில் பார்க்கலாம். அத்துடன் சுவிஸில் இராஜகோபரத்துடன் அமைக்கப்படும் முதலாவது இந்து ஆலயம் இது இந்த திருப்பணிக்கு சுவிஸில் உள்ள அனைத்து இந்துமக்களும் தவறாமல் பங்களிக்கவேண்டும். அப்போதுதான் இந்த ஆலயத்தின் நிர்மாணப்பணிகளை விரைவில் பூர்த்திசெய்து புதிய ஆலயத்தில் அநைவரும் அம்பாளை தரிசிக்கலாம்.

நன்றி

இங்ஙனம்

ஆலயநிர்வாகம்

 

 

Sponsoren

 

 

விசேட தினங்கள்  2011

14.04.2011    சித்திரை புத்தாண்டு

17.04.2011  சித்திரா  பெளர்ணமி

17.05.2011  வைகாசிவிசாகம்

07.07.2011 ஆனிஉத்தரம்

17.07.2011   ஆடிப்பிறப்பு

19.07.2011  1ம்  ஆடிச்செவ்வாய்

bild0840

ஆலய  முன்புறத்தோற்றம்

 

dsc00469

ஸ்ரீ வசந்த மண்டப சன்னதி

dsc00413

ஆலயத்தின்  உள்வீதி

 

dsc00468

ஸ்ரீ நவக்கிரக  சன்னதி

dsc00398

ஸ்ரீ வினாயகர்  சன்னதி

dsc00401

ஸ்ரீ முருகன் சன்னதி

 

dsc00461

ஸ்ரீ நாககன்னி சன்னதி

 

dsc00441

 

dsc00444

 

dsc00450

 

dsc00451