Hindu-Tempel

Click here to edit subtitle

கட்டுமானப்பணி

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்„


எல்லாம் வல்ல ஸ்ரீ மனோன்மணி அம்பாள் அருள் பாலிக்க,சுவிஸ்நாட்டின் ஓல்ரன் மாநகரில் ஏறத்தாள 17 வருடகாலமாக ஸ்ரீமனோன்மணி அம்பாள் அடியவர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள். அம்பாளிற்கு நிரந்தரமாக ஆலயம் ஒன்றை அமைக்கும் நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு இடத்தை வாங்கி அதில் அடிக்கல்லும் நாட்டப்பட்டதும் நீங்கள் அறிந்த விடயமே. புலம்பெயர் மண்ணாம் சுவிஸ்நாடு, அகதிகளாக வந்த சமூகத்தின் மதவழிபாட்டிற்கு மதிப்பளித்து ஆலயம் அமைப்பதற்கான அனுமதியையும் அரசு வழங்கியுள்ளது மிகவும் சந்தோஷமான விடயம். அதன்அடிப்படையில் ஆகம விதிப்படி ஒரு புதிய ஆலயத்தை அடியார்களாகிய உங்களின் பங்களிப்பின் மூலம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான ஆரம்ப வேலையை 22.08.2008 அன்று தொடக்கி வைத்து தொடர்ந்து ஆலயம் அமைக்கும்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் நேரடியாகவும் சென்று பார்வையடலாம், அல்லது அதற்கென ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இணையத்தளத்தினூடாகவும் அறிந்துகொள்ளலாம். ஆலயத்தின் இணையத்தள முகவரி. www.hindu-tempel.ch அடியார்களின் சூழ்நிலை கருதி ஆலயத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அதனை உங்கள் பெயர்களால் உபயமாக செய்துதரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அவையாவன ஒவ்வொரு சதுரமீற்றருக்கான நிதி, மூலஸ்தானம், ராஜகோபுரம், என பல பிரிவுகளாகப் பிரித்து மேலும் மூலஸ்தானம், ராஜகோபுரத்தை பல படிகளாக பிரித்து தாங்கள் பங்களிக்க ஏதுவாக வகுத்துள்ளோம். ஒரு ஆலயத்தை ஒரு தனிநபராலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராலோ கட்டிவிட முடியாது. ஒரு முழுமையான ஆலயம் உருவாகவேண்டுமெனில் எல்லாமக்களும் பங்கு கொள்ளவேண்டும். இவ்வாலயத்தைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டிமுடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் உங்கள் எல்லோருடைய இல்லங்கள் தோறும் சென்று நிதி திரட்டுவதென்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே நமக்கு வழங்கிய அங்கீகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி ஒரு முழுமையான ஆலயத்தைக் கட்டுவதற்கு நீங்கள் எல்லோரும் முன்வர வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு கருத்து வேறுபாடுகளும் காட்டாமல் புலம்பெயர் மண்ணில் வாழ்கின்ற நம் எதிர்காலச் சந்ததியினரின் இந்துமதக் கோட்பாட்டை ஊக்குவிக்கும் இச் செயற்பாட்டிற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றோம். எல்லாம் வல்ல ஸ்ரீமனோன்மணி அம்பாள் தங்களுக்கு நல்லாசிகளும் நல்லருளும்  வழங்க வேண்டும், அத்தோடு எம் தாயக மக்களின் துன்பநிலைமாறி,இன்பநிலைதோன்ற எல்லா வல்ல அன்னையை பிரார்த்திப்போமாக.


நன்றி, வணக்கம்

இங்ஙனம்

ஆலய நிர்வாகம்