Hindu-Tempel

Click here to edit subtitle

மகா கும்பாபிஷேகம் 2013


நூதன  பிரதிஸ்டா  மஹா  கும்பபிஷேக  விஞ்ஞாபனம்

திருக்குடமுழுக்கு  பெருஞ்சாந்தி  விழா

பேரன்புமிக்க மெய்யடியார்களே

எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் ஆன்மாக்கள்மீது கொண்ட தனிப்பெருங் கருணையால் வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்கள் பெற்றிட தோன்றிய அருட்சக்திவடிவமே ஸ்ரீமனோன்மணி தேவி என ஆகமங்கள் போற்றுகின்றன. வெள்ளிப்பனிமலை சார்ந்த இயற்கை அழகும் ஈழத்தமிழர்களின் சைவத்தமிழ்வழர்ச்சியும் நிறைந்து விளங்கும் சுவிஸ்நாட்டின் மத்தியில் நிலவளமும் நீர்வளமும் ஒருங்கே இணையும் அழகுமிகு ஓல்ரன் பகுதியில் முதல் சைவ்வழிபாட்டுத்தலமாக விளங்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீமனோன்ம்மி அம்பாள் வினாயகர், சுப்ரமண்யர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு புதிய ஆலயம் உயரிய கோபுரம் முதலான பாரியதிருப்பணிகள் கொடையுள்ளம் கொண்ட அடியார்கள் ஆதரவாலும் ஆலயபிரதமகுரு ஆலயபரிபாலனசபையினர் ஆகியோர்களது பெருமுயற்சியாலும் இந்திய சிற்பகலைஞர்களால் ஆகமவிதிகளுக்கமைய அமைக்கப்பெற்று அழகுற வர்ணம் தீட்டி நிகழும் மங்களகரமான நந்தன வருடம் பங்குனிமாதண் 4ம் நாள் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஷஷ்டிதிதியும்,கார்த்திகா நட்சத்திரமும், சித்தயோகம், சந்திரஹோரையும் அமையும் சுபதினத்தில் காலை 9.35 மணிமுதல் 11.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் மஹாகும்பாபிஷேக வைபவம் நடைபெற இறையருள் கூடியுள்ளது.

ஆன்றோர்கள் சமயசான்றோர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இத்திருக்குடமுழுக்கு நீராட்டு வைபவத்திலும் அதற்கு முன் பின் நடைபெறும் கிரியைகளிலும் பங்குபற்றி அன்னை ஸ்ரீமனோன்மணி அம்பிகையின் திருவருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

  • 14.03.2013  வியாழக்கிழமை

  • 14.03.2013 வியாழக்கிழமை விநாயகர்வழிபாடு,கணபதிஹோம்ம் அதுக்ஞை நவக்கிரகஹோமம், கோவாசம்,சாந்திபூஜைகள்

காலை 8,00மணிமுதல் புதியமூர்த்திகள் பூர்வாங்க்கிரியைகள்.

 

மாலை 5.00மணிமுதல் கிராமசாந்தி,பிரவேசபலி, வாஸ்து சாந்தி ரட்ஷாபந்தனம், கலாகர்ஷணம்,யாகாரம்பம், தூபி தீபஸ்தானம், ஹோமங்கள் சர்வாஞ்சலி, யந்திரவிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம்

  • 15.03.2013 வெள்ளிக்கிழமை காலைசுத்தி யாகபூஜைஹோமம், பூஜை தீபாராதனை

காலை 8.00மணிமுதல் தைலாம்பியங்கம்

மாலை 5.00 மணிமுதல் பஞ்ச்சுத்தி, யாகபூஜை கட்கமாலா ஹோமம், சுபமங்கள தீப்பூஜை சர்வாஞ்சலி.

  • 15.03.2013 வெள்ளிமாலை 7.00 மணிமுதல் 16.03.2013 சனிக்கிழமை மாலை 6.00 மணிவரை எண்ணைக்காப்புசாத்தலாம்

  • 16.03.2013 சனிக்கிழமை பஞ்ச்சுத்தி யாகபூஜை பாபனாபிஷேகம்.

காலை 8.00மணிமுதல் விஷேடதிரவியஹோம்ம் தீபாராதனை சர்வசாந்தி.

மாலை 5.00மணிமுதல் விம்பசுத்தி, யாகபூஜை, நியாசம், ஸ்பர்சாகுதி, தீபாராதனை, சர்வாஞ்சலி, வஸ்திரஉபசாரம்.

  • 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை

காலை 6.00 மணிமுதல் மங்களசுத்தி,யாகபூஜை, மஹாபூர்ணகுதி, தானங்கள், துகிர்பலி, தீபாராதனை, சர்வாஞ்சலி,

கும்ப பிரதட்ணம்.

காலை 9.30 மணிக்கு கோபுரதூபி அபிஷேகம்.

காலை 10.00 மணிக்கு மஹாகும்பாபிஷேகம்,பரிவாரமூர்த்திகள் அபிஷேகம், தசமங்களதர்சனம், எஜமானபிஷேகம்,

தீபாராரனை, ஆசீர்வாதம், ஆசியுரைகள் அன்னதாநம் வழங்கல்.

மாலை 7.00 மணிமுதல் மஹாபிஸேகம், விஷேடபூஜை, விநாயர் ,சுப்ரமணியர் சகிதம் அம்பாள் திருவீதியுலா.

தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேக பூஜகள் நடைபெற்று 04.05.2013 சனிக்கிழமை சங்காபிஸேகத்துடன் 1008 மண்டலபூர்த்தியடையும் மஹாகும்பாபிஷேகம் நன்றுசிறக்க நல்லாசிவழங்கி ஆசீர்வதிப்பவர்கள்

ஸ்ரீ காஞ்சிகாமகோடிபீடாதிபதிகள்

பிரதிஸ்டா பிரதமசிவாச்சாரியார்கள்

கிரியாகலாமணி சிவாகமஞானசாகரம், சிவஸ்ரீ Dr. நா. சோமஸ்கந்தகுருக்கள்

முத்தமிழ்குருமணி வகீசவாதிரி சிவஸ்ரீ Dr. நா. சர்வேஸ்வரகுருக்கள் ஸ்ரீகதிரமளைச்சிவன்தேவஸ்தானம

தமிழ்நாடு மயிலாடுதுறை வேதாகமவித்தியாலய அதிபர் சிவஸ்ரீ Dr. A.V. சுவாமிநாதசிவாச்சாரியார்.

தமிழ்நாடு திருச்சி சிவாகமசெல்வர் சிவஸ்ரீ. திருஞானசம்பந்தகுருக்கள்