Hindu-Tempel

Click here to edit subtitle

ஆலயத்திருப்பணி சிறப்புடன் நிறைவேற நல்லாசிகள்

ஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்திருப்பணி சிறப்புடன் நிறைவேற நல்லாசிகள்

ஆகம ஆலோசகர் சிவாகமவித்வான் அவுஸ்திரேலியத்திருமணப்பதிவாளர்

டாக்டர் சிவஸ்ரீ. நா.சோமாஸ்கந்தக்குருக்கள்

அவுஸ்திரேலிய இந்துக்குருமார் கவுன்சில் சர்வதேச இந்துக் குருபீடம்

அவுஸ்திரேலியப் பிரதிநிதி

சுவிர்சலாந்தின்  ஓல்ரன்  அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்மாள் மிகவும் தெய்வீக  சக்தி நிறைந்த  தெய்வமாகும். அந்த ஆலயத்தில்  கடந்த பலவருடங்களாக கொடியேற்று விழாவுடன் வருடாவருடம் மிகவும் சிறப்பாக மகோற்சவப்பெருவிழா நடைபெறுவதை அனைவரும்  அறிவர்.தேர்த்திருவிழாவன்று பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள்  ஒன்றுகூடி அன்னையின் விழாவை  தரிசித்து  மகிழ்வர். அம்மன்  திருவருளால்  புதிய  ஆலயம்  கட்டுவதற்கென  சொந்தமாக  காணி  வாங்கி  அடிக்கல்  நாட்டுவைபவத்துடன்  புதிய ஆலயதிருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது  அன்னையின் அருளுக்கு  அரியதொரு எடுத்துக்காட்டு  எனலாம்.தெய்வத்  திருக்கோவில் சிறப்புற நிகழ்ந் தேறி மஹாகும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக  ஆலயத்தினர் அயராது  பாடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் ஆலயத் திருப்பணி நிதிக்காக தமது  பங்களிப்பைச்  செய்வது அன்னையின்  பக்தர்களுக்கு  தலையாய  கடமையாகும். தமிழகத்திலிருந்து தருவிக்கப்படவிருக்கும் சிற்பிகள்  வந்திறங்கியதும் அம்மாளின்  அருளால்  அழகிய புதிய  திருக்கோவில்  கண்கவர் சிற்பவேலைப்பாடுகளுடன் கவினுறு சித்திரப்பதுமைகள் தெய்வீகத் திருவுருவச் சிலைகள் அமைந்த சுந்தர விமானங்களுடன் ஒவ்வொரு மூர்த்திகளுக்கும்  தனித்தனியாகக் கருவறைகள் நிர்மாணிக்கப்பட்டு  அனைத்துப் பரிவாரங்களுடனும் அண்டசராசரங்களுக்கும்  தாயாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி  அம்பாள் மூலாலயத்தில் சுவாண நவரத்தினமயமான சிம்மாசனத்தில் வீற்றிருந்து அனைவருக்கும்  நல்லருள் பாலிக்கும் கண்கொள்ளாக் காட்சியை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டு களிக்க ஆயத்தமாகுவதுடன், தேவியின் ஆலயத் திருப்பணிக்காக  உங்கள்  பங்களிப்பை உடனடியாக  வாரி வழங்கி  அன்னையின் அருளால் அனைவரும் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ்வதுடன் தாயகத்து உறவுகளின் அல்லல்  தீர்த்து சாந்தியும்  சமாதானமும்  நிலவ  அன்னையைப்  பிரார்த்தித்து  அருள்பெறுவோமாக.

 

“திருப்பணி செய்வாக்கு செம்பொன் விருப்புடன் ஈவார் பெறுக வீடு„